அனுராதபுரம் சீப்புக்குளம் பகுதியில் நேற்று (24) அதிகாலை நபர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியில் உள்ள வீடொன்றில் சிலர் கலந்து கொண்ட மதுபான விருந்தின் போதே இக்கொலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விருந்தின் போது மோதல் ஏற்பட்டிருந்த நிலையில் பாதிக்கப்பட்டவர் அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.
நேற்று (23) பிற்பகல் உயிரிழந்தவரின் சகோதரர் உள்ளிட்ட சிலர் மதுபான விருந்தினை ஏற்பாடு செய்திருந்த நிலையில், அதில் கலந்துகொண்ட இருவரே இக்கொலையைச் செய்துள்ளனர்.
இருவரும் ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மிஹிந்தலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
Follow on social media