ஜனவரி முழுவதும் வெப்ப நிலையில் மாற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில் மன்னார், அம்பாறை, கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்த மாதத்தின் இரவு வேளைகளில் வழமையாக நிலவும் வெப்பத்தை விட அதிக வெப்பம் பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேலும் சில மாவட்டங்களில் வழமையான வெப்பநிலை மேலும் வீழ்ச்சியடையக்கூடும்.

குறிப்பாக புத்தளம், மன்னார், அநுராதபுரம், கொழும்பு மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் பகல் வேளையில் நிலவும் வழமையான வெப்பநிலையின் அளவு வீழ்ச்சியடைவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

குருணாகல், கண்டி, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ளடங்குகின்றன.

மேலும் இந்த மாதம் கேகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் அதிக மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply