இந்தியா பாக்கிஸ்தான் தொடரில் சம்பியனானது பாக்கிஸ்தான்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான ஆசிய கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் ஏ அணி வெற்றி பெற்றுள்ளது.

கொழும்பு ஆர் பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கில் நேற்று இடம்பெற்ற இறுதி போட்டியில், இந்திய ஏ மற்றும் பாகிஸ்தான் ஏ ஆகிய அணிகள் மோதின.

இந்த போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய ஏ அணி களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

முதலில் துடுப்பாடிய பாகிஸ்தான் ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 8 இலக்குகளை இழந்து 352 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இந்தநிலையில் 353 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பாடிய இந்திய ஏ அணி 40 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 224 ஓட்டங்களை மாத்திரமே பெற்று 128 ஓட்டங்களால் தோல்வியடைந்தது.

போட்டியில் 108 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த பாகிஸ்தான் ஏ அணியின் தய்யாப் தாஹிர் ஆட்டநாயகனாக தெரிவானார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting