தொழில்நுட்ப ரீதியில் மிகவும் முன்னேறிய திறன் கொண்ட செல்போனை அறிமுகப்படுத்துகிறது டெஸ்லா
மின்சாரக் கார் உற்பத்தியில் புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனம், தொழில்நுட்ப ரீதியில் மிகவும் முன்னேறிய திறன் கொண்ட செல்போனை அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
‘டெஸ்லா பை’ என்ற பெயரில் அறிமுகமாக உள்ள இந்த செல்போன், எலான் மஸ்க்கின் சேட்டிலைட் பிராட்பேண்ட் நிறுவனமான ‘ஸ்டார்லிங்க்’ உடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என்றும், அதன் மூலம் இணையதள வசதி உள்ளிட்டவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும், அந்த செல்போனில் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய ஒளி தகடின் உதவியுடன், சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் தகவல் வெளியாகி உள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு தனது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தை அனுப்புவதை எலான் மஸ்க் கனவுத் திட்டமாக கொண்டுள்ள நிலையில், இந்த ‘டெஸ்லா பை’ போனை அங்கும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த மேலும் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
Follow on social media