பாடசாலை ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சம்பவம் மித்தெனிய பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றிலேயே இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட மாணவனின் தாய் கருத்துத் தெரிவிக்கையில்,
பாடசாலை ஆசிரியரால் தனது மகன் மீது இதற்கு முன்பும் பல முறை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மித்தெனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
Follow on social media