பாணந்துறை பகுதியில் அமைந்துள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் போத்தலை உடைத்து பிரிதொரு மாணவரை தாக்கி காயப்படுத்தியுள்ளார்.
சம்பவத்தில் காயமடைந்த மாணவர் பாணந்துறையிலுள்ள வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
12 வயதுடைய மாணவர் ஒருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த மாணவரின் தந்தை காவல் நிலையத்தில் மேற்கொண்டுள்ள முறைப்பாட்டுக்கு அமைய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
Follow on social media