மத்திய காசாவில் தங்குமிடமாக மாறிய பாடசாலை மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் சிறுவர்கள் உள்பட 20 பேர் கொல்லப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் ஆண்டுகாலப் போரினால் இடம்பெயர்ந்த பல பாலஸ்தீனியர்கள் இந்த பாடசாலையில் அடைக்கலம் அளித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் உயிரிழந்தவர்களின் உடல்கள் நுசிராட்டில் உள்ள அல்-அவ்தா மருத்துவமனைக்கும், டெய்ர் அல் பலாவில் உள்ள வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow on social media