தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் முறைகேடாகச் சம்பாதித்த குற்றச்சாட்டை நிரூபித்தால் குறித்த சொத்துக்கள் அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்படும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சத்தியக் கடதாசிகள் மூலம் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களில் தானும் தனது குடும்ப உறுப்பினர்களும் குற்றவாளிகள் அல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
Follow on social media