கார் விபத்தில் சிக்கிய நடிகர் அர்னால்டு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர் பெரிய கார் விபத்தில் சிக்கி உயிர் பிழைத்து இருக்கிறார்.

பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு ஸ்வாஸ்னேகர். ஹாலிவுட் திரைப்படங்களின் மூலம் புகழ் பெற்ற இவர் தற்போது படங்களில் நடிப்பதை விடுத்து அரசியலில் ஈடுபட்டு வருகிறார். அர்னால்டு சென்ற கார் தற்போது விபத்தில் சிக்கியுள்ளது. லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் உள்ள சாலையில் அர்னால்டு கார் விபத்தில் சிக்கியுள்ளார்.

அர்னால்டு காருக்கு முன்னதாக சென்ற இரு கார்கள் நேருக்கு நேர் மோதியுள்ளன. இதனால் பின்னாடி வந்த வாகனங்களும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாக மோதின. மொத்தம் நான்கு கார்கள் இந்த விபத்தில் சிக்கின. அர்னால்டின் எஸ்யூவி மாடல் கார் ஒரு சிறிய காரின் மீது மேலே ஏறி நின்றது. சீட் பெல்ட் அணிந்திருந்தால் அதிர்ஷ்டவசமாக அர்னால்டுக்கு எந்த பெரிய காயங்களும் ஏற்படவில்லை.

விபத்து தொடர்பான பல படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த விபத்தில் பெண் ஒருவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply