யாழ் சாவகச்சேரியில் கோர விபத்து; 4 போ் படுகாயம்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி, நுணாவில் பகுதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் 4 போ் படுகாயமடைந்து ஆபத்தான நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

குறித்த சம்பவம் இன்று மாலை 5.20 மணியளவில் இடம்பெற்றுள்ளதென கவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மன்னாாிலிருந்து – யாழ்ப்பாணத்திற்று வருகைதந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தும், யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஹயஸ் வாகனமும் நேருக்கு நேர் மோதியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் ஹயஸ் வாகனத்தில் பயணித்த 4 போ் படுகாயமடைந்துள்ளதாகவும், இதில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி கவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply