கடத்தப்பட்ட மகன் – தந்தை உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காணாமல் போன தனது மகனைத் தேடிவந்த தந்தையான வவுனியா மகாறம்பைக்குளம் ஶ்ரீராமபுரம் பகுதியை சேர்ந்த முத்தையா ஆறுமுகம் (வயது65) சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

இவரது மகனான ஆறுமுகம் சிவகுமார் கடந்த 2007 ஆம் ஆண்டு வவுனியாவில் வைத்து கடத்தப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தருமாறு போராடியிருந்தார். இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளார்.

காணாமல் போனவர்களின் உறவினர்கள் பலர், தங்களுடைய உறவுகளைத் தேடி போராட்டங்களில் ஈடுபடுகின்றனர். அவர்களில் பலரும் உறவினர்களை காணாமலே மரணமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting