யாழ்ப்பாணம் வடமராட்சி துன்னாலை மேற்கு பகுதியில், 37 வயதான பெண்ணொருவர், போதை பொருளுடன் நெல்லியடிப் பொலிஸாரால் நேற்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து, 720 மில்லி கிராம் அளவுள்ள ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதுடன், 23,000 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டது.
குறித்த பணம் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்திருக்கலாமென பொலிஸார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை நேற்றைய தினமும் துன்னாலை கிழக்கு பகுதியில் 51 வயதான பெண்ணொருவர் மற்றும் நெல்லியடி பகுதியில் இளைஞன் ஒருவர் ஆகிய இருவரும் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் குறித்த குறித்த இருவரையும் பொலிஸ் தடுப்பு காவலில் தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொள்ள, பருத்தித்துறை நீதவான் அனுமதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media