தூதரக அதிகாரிகளால் இலங்கைப் பெண்கள் துஸ்பிரயோகம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வீட்டுப்பணிப்பெண்களாக சென்று ஓமானில் சிக்குண்டுள்ள இலங்கைபெண்கள் தூதரக அதிகாரிகளால் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றனர் என பாதிக்கப்பட்ட பெண்களின் தகவல்களை மேற்கோள் காட்டி ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது .

சம்பவம் தொடர்பில் ஆங்கில ஊடகம் மேலும் தெரிவித்துள்ளதாவது,

ஓமானில் உள்ள இலங்கை தூதரகத்தினால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பான இல்லமொன்றில் உளஉடல் பாதிப்புகளை எதிர்கொண்ட 90பெண்கள் தங்கியுள்ளனர். அந்த தங்குமிடம் ஒரு பெண்ணிற்கான அடிப்படை வசதிகளை கொண்டிருக்கவில்லை.

இங்கு தங்கவைக்கப்பட்டுள்ள பெண்களில் சிலர் ஏலத்தில் விற்கப்பட்டவர்கள் என்றும், அவர்கள் எதிர்கொண்ட மோசமானஅனுபவம் காரணமாக அங்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் துயரமளிக்கும் விதத்தில் அலுவலகத்தினால் நிர்வகிக்கப்படும் தங்குமிடத்திலும் அவர்கள் நெருக்கடியை எதிர்கொள்கின்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நான் ஓமானிற்கு வந்து மூன்று வருடங்களாகின்றன நான் கடந்த மாதம் இங்கு வந்தேன் ஆனால் அவர்கள் நான் வெளியே செல்ல அனுமதிக்கின்றார்கள் இல்லை அதிகாரியிடம் எனது கடவுச்சீட்டும் டிக்கெட்டும் உள்ளது அவர் அவற்றை கிழித்துவிடப்போவதாக மிரட்டுகின்றார். அவர் என்னை தன்னுடன் உறவு வைத்துக்கொள்ள நிர்ப்பந்திக்கின்றார் .

நான் இங்கு யாரையும் காதலிக்க வரவில்லை நான் ஒரு மாதகாலமாக முடங்கியநிலையில் இருக்கின்றேன். அந்த அதிகாரி எனது ஆவணங்களை பரிசலீப்பதற்கு மறுக்கின்றார்.

நான் அவரது விருப்பத்திற்கு உட்படாததால் என்னை இங்கு பலவந்தமாக வைத்துள்ளனர் என பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். அதேசமயம் குறிப்பிட்ட அதிகாரியே தூதரகத்தின் நடவடிக்கைகளை தீர்மானிக்கின்றார் இங்குள்ள பெண்கள் எவரும் இலங்கை தூதுவர் பார்க்கவில்லை என மற்றுமொரு பெண் தெரிவித்துள்ளார்.

அதிகாரியொருவர் இருக்கின்றார் அவர் 1.5 மில்லியனிற்கு யுவதிகளை விற்பனை செய்கின்றார் அவர் பெண்களை பாலியல் நடவடிக்கைகளிற்காக கடத்துவதில் ஈடுபட்டுள்ளார்.

இங்குள்ள அனைத்து பெண்களிற்கும் சமைத்து சாப்பிடுவதற்கு 10 கிலோ உணவையே அவர்கள் வழங்குகின்றனர். பெண்கள் பட்டினியால் அழும் தருணங்களும் உண்டு என சிக்குண்டுள்ள பெண்ணொருவர் தெரிவித்துள்ளார். அதுமட்டுமல்லாது இரண்டு கழிவறைகள் உள்ளன ஒவ்வொன்றையும் 40 பெண்கள் பயன்படுத்துகின்றனர்.

அதற்கும் உரிய கதவுகள் இல்லை . குறிப்பிட்ட நபர் பெண்களை பாலியல் நடவடிக்கைகளிற்காக விற்கின்றார். அதோடு பல பெண்கள் பாலியல் ரீதியில் துஸ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களின் தகவலைகளை நான் ஊடகங்களிற்கு தெரிவிக்க முடியாது எனவும் அந்த பெண் தெரிவித்துள்ளார். ஏனையபெண்களும் பாதிக்கப்படுவதற்கு முதலில் அவர்களை மீட்கவேண்டும்.அங்கு தொடர்பாடல் வசதிகள் எதுவுமில்லை .

பல பெண்கள் பல மாதங்களாக தங்கள் குடும்பத்தினரை தொடர்புகொள்ளவில்லை இங்குள்ளவர்கள் தங்கள் பெண்பிள்ளைகள் இறந்துவிட்டார்கள் என கருதுகின்றனர் .

ஆனால் அவர்கள் பாலியல் நடவடிக்கைகளிற்காக விற்கப்பட்டுள்ளனர் முகவர் நிலையங்களின் பிரதிநிதிகள் இதன் மூலம் கிடைக்கின்ற பணத்தை தங்கள் மத்தியில் பங்குபோட்டுக்கொள்கின்றனர் எனவும் அங்குள்ள பெண்களில் ஒருவர் தெரிவித்துள்ளதாக ஆங்கில ஊடகம் கூறியுள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.