யாழ்.கோப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள வீடொன்றில் 17 வயதுச் சிறுமி குளிக்கும்போது அதை மறைந்திருந்து காணொலி எடுத்த 21 வயதானஇளைஞன், ஊர்மக்களால் நையப்புடைக்கப்பட்டு கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
இளைஞன் காணொலி எடுப்பதை குளித்துக்கொண்டிருந்த சிறுமி எதேச்சையாகக் கண்டுள்ளார். அவர் அலறிய சத்தம் கேட்டு அயலவர்கள் அங்கு வந்தனர். காணொலி எடுத்த இளைஞனை மடக்கிப்பிடித்து முறையாகக் கவனித்தனர்.
அதன்பின்னர் அவனை பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். வட்டுக்கோட்டை அராலியைச் சேர்ந்த இளைஞனே இவ்வாறு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளான்.
Follow on social media