விஜய் சேதுபதிக்கு கிடைத்த சிறப்பு கௌரவம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக திகழும் விஜய் சேதுபதியை ஐக்கிய அரபு கௌரவப்படுத்தியுள்ளது.

அமீரக அரசு கடந்த 2019-ஆம் ஆண்டு விசா வழங்கும் நடைமுறைகளில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தது. இதன் ஒரு பகுதியாக அமீரகத்தில் வசிக்க விரும்பும் வர்த்தகர்கள், முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்டோர் அமீரகத்தை சேர்ந்த நிறுவனம் அல்லது தனி நபர் ஆதரவு இல்லாமல் 5 அல்லது 10 ஆண்டுகளுக்கு வசிக்கும் வகையில் கோல்டன் விசா அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விசாவானது புதுப்பித்துக் கொள்ளும் வசதி கொண்டது ஆகும்.

சமீபத்தில் நடிகை திரிஷா, நடிகர் பார்த்திபன் உள்ளிட்ட பலருக்கு அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்த நிலையில் தற்போது நடிகர் விஜய் சேதுபதிக்கு கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting