தமிழ் சினிமாவில் பாடகியாகவும், முன்னணி நடிகையாகவும் வலம் வரும் ஆண்ட்ரியா, அடுத்த படத்தில் கடல் கன்னியாக நடித்து வருகிறார்.
வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் ஆண்ட்ரியா தற்போது ஒரு பேண்டஸி கதையம்சம் கொண்ட திரைப்படத்தில் நடித்து வருகிறார். துப்பாக்கி முனை திரைப்படத்தை இயக்கிய தினேஷ் செல்வராஜ் இயக்கும் பெயரிடப்படாத பேண்டஸி படத்தில் ஆண்ட்ரியா கடல்கன்னியாக நடிக்கிறார்.
இந்தியாவில் எடுக்கப்படும் முதல் கடல்கன்னி திரைப்படம் இதுவாகும். இந்த திரைப்படத்தில் நடிகை சுனைனா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். மேலும் இந்த படத்தில் பிந்துமதி, முனிஷ்காந்த் மற்றும் குழந்தை நட்சத்திரங்கள் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. சென்னை தி.நகரில் ரூ. 50 லட்சம் மதிப்பிலான பிரம்மாண்ட செட் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி அருகே உள்ள மணப்பாடு பகுதியிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளனர். வருகிற பிப்ரவரி மாதத்திற்குள் படப்பிடிப்பை முடித்து கோடை விடுமுறைக்கு படத்தை வெளியிட படக்குழு முடிவு செய்துள்ளனர்.
Follow on social media