சிவனொளிபாதமலைக்கு யாத்திரை சென்ற ஒருவர் தனக்குத்தானே தீ வைத்துக் கொண்ட நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
நல்லத்தண்ணி பகுதியில் இன்று(03) அதிகாலை 1.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
இதனையடுத்து அவர் உடனடியாக மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைகளுக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அத்துடன் அவர் அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பில், நல்லத்தண்ணி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
Follow on social media