இளைஞன் மீது காவல்துறையினர் தாக்குதல் – அலரி மாளிகைக்கு முன்பாக பதற்றம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள அலரிமாளிகைக்கு முன்பாக கடும் பதற்றம் நிலவுவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு இடையூறாக அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மற்றும் பார ஊர்தியை அகற்றுவதற்கு கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் இன்று முயற்சித்தபோது இவ்வாறு அமைதியின்மை ஏற்பட்டுள்ளது.

குறித்த ​​பேருந்து மற்றும் பாரஊர்தி தொடர்பில் கொள்ளுப்பிட்டி காவல் நிலையத்தில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் முறைப்பாடளிக்க சென்றிருந்தபோது, குறித்த வாகனங்களின் உரிமையாளர்கள் தொடர்பான தகவல்கள் தமக்கு தெரியாதென கொள்ளுப்பிட்டி காவல்துறையினர் தெரிவித்ததாக அலரிமாளிகைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் குற்றம் சாட்டியுள்ளர்.

இந்நிலையில், இன்றுகாலை பேருந்தை காவல்துறையினர் அகற்றுவதற்கு சென்றிருந்தபோது, காவல்துறையினருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டதால் அமைதியின்மை ஏற்பட்டிருந்தது.

இதன்போது நடத்தப்பட்ட தாக்குதலினால், போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் காயமடைந்ததாக போராட்டத்தில் கலந்துகொண்ட பிக்கு ஒருவர் தெரிவித்துள்ளார்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting