நமது உடலின் பெரும்பகுதி தண்ணீரால் ஆனது. எனவே சரியான அளவு மற்றும் சீரான இடைவெளியில் தண்ணீர் குடிப்பது ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியம். இல்லையெனில் உடலில் நீர்ச்சத்து குறைபாடு மற்றும் பல பிரச்சனைகள் ஏற்படும். ஒரு ஆரோக்கியமான நபர் ஒரு நாளைக்கு 3 முதல் 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். ஆனால், இரவில் தண்ணீர் குடிக்க வேண்டுமா, கூடாதா? அப்படியானால், எவ்வளவு? இந்தக் கேள்விகள் பலரது மனதிலும் இருக்கும்.
இரவில் தண்ணீர் குடிக்க வேண்டுமா இல்லையா?
இரவில் படுக்கும் முன் தண்ணீர் குடிப்பது அவசியம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இதனால் உணவு எளிதில் ஜீரணமாகும். இது தவிர வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் தண்ணீரின் மூலம் உடலால் உறிஞ்சப்படுகிறது. தண்ணீர் குடிப்பதன் மூலம், வளர்சிதை மாற்றம் ஆரோக்கியமாக இருக்கும். மேலும் நச்சுகள் மற்றும் கழிவுகளை வெளியேற்றுவதில் எந்த பிரச்சனையும் இருக்காது. தண்ணீர் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறைந்த அளவு தண்ணீர் குடிப்பவர்களுக்கு உடலில் பல பிரச்சனைகள் ஏற்படும்.
பகலில் நிறைய தண்ணீர் குடிப்பதும், இரவில் படுக்கைக்குச் செல்வதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பும் குடிப்பது நல்லது. தூங்கும் போது அதிக தண்ணீர் குடிப்பது தூக்கத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இவர்கள் அதிகமாக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும்
நீரிழிவு நோயாளிகள் மற்றும் இதய நோய் உள்ளவர்கள் இரவில் அதிக தண்ணீர் குடிப்பதை தவிர்க்க வேண்டும். இரவில் அதிகளவு தண்ணீர் குடித்தால், மீண்டும் மீண்டும் கழிவறைக்கு செல்ல நேரிடும். இது அவர்களின் தூக்கத்தை வெகுவாக பாதிக்கும். நல்ல ஆரோக்கியத்திற்குத் தேவையான 8 மணிநேர தூக்கம் அவர்களுக்கு கிடைக்காமல் போகலாம்.
இரவில் தண்ணீர் குடிப்பது எப்படி?
சாதாரண தண்ணீரைக் குடிப்பதற்குப் பதிலாக, நீங்கள் எலுமிச்சை, பச்சை தேநீர், மூலிகை தேநீர் மற்றும் பிற ஆரோக்கியமான பானங்கள் குடிக்கலாம். நீங்கள் சாதாரண தண்ணீரை அதிகமாக குடித்தால், அடிக்கடி சிறுநீர் கழிக்க இரவில் எழுந்திருக்க வேண்டியிருக்கும். இதனால் தூக்கம் வராமல் போகும். இரவில் ஒன்று அல்லது 2 கிளாஸ் தண்ணீர் மட்டும் குடிப்பது நல்லது, இது ஆரோக்கியத்திற்கு நல்லது.
இரவில் தண்ணீர் குடிப்பது ஏன் முக்கியம்?
இரவு உணவுக்குப் பிறகு தண்ணீர் குடிப்பதால் இயற்கையான முறையில் உடலை சுத்தப்படுத்தும். இது நச்சுக்களை வெளியேற்றி செரிமானத்திற்கு உதவுகிறது. அசிடிட்டி அல்லது கேஸ் பிரச்சனை உள்ளவர்கள் கண்டிப்பாக இரவில் தண்ணீர் குடிக்க வேண்டும். சளி இருமல் உள்ளவர்களுக்கு, மிதமான வெதுவெதுப்பான நீர் உதவும்.
Follow on social media