இலங்கை அணிக்கு அபராதம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது ரி20 போட்டியின் போது குறைந்த வேகத்தில் ஓவர்களை வீசியமை தொடர்பில் இலங்கை அணிக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

போட்டி தொகையில் 20 வீதத்தை அபராத தொகையாக சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்துள்ளது.

அத்துடன் சர்வதேச போட்டியில் தகாத மொழிப் பிரயோகத்தை பயன்படுத்தியதன் மூலம், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐ.சி.சி.) நன்னடத்தை விதி 2.3 ஐ மீறியதாக இலங்கை அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் பெதும் நிஸ்ஸங்க மீது குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

துடுப்பெடுத்தாடும்போது, பந்தை தவறவிட்டதை அடுத்து அவர் தகாதா வார்த்தை பிரயோகம் மேற்கொண்டமை ஸ்டம்பில் இருந்த ஒலிவாங்கியில் பதிவாகி இருந்தது.

இது அவரது ஒழுக்கம் சார்ந்த விடயத்தில் ஒரு பாதக புள்ளியை சேர்த்துள்ளதுடன் அவருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting