2021 O/L கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் கால எல்லை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
மாணவர்களின் நலன் கருதி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், எல்.எம்.டி. தர்மசேன விடுத்துள்ள அறிக்கையில், இதற்கு முன்னர் பெப்ரவரி 03 வரை நீடிக்கப்பட்டிருந்த குறித்த விண்ணப்பம் கோரும் இறுதித் திகதி பெப்ரவரி 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்ட நிலையில், அது மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Online முறை மூலம் பரீட்சைத் திணைக்களத்தின் இணையத்தளமான www.doenets.lk அல்லது onlineexams.gov.lk/eic அல்லது உத்தியோகபூர்வ கையடக்கத்தொலைபேசி செயலியான ´Exams Sri Lanka´ (Android | iOS) ஊடாக, அறிவுறுத்தல்களை பின்பற்றி இதற்காக விண்ணப்பிக்கலாம்.
Follow on social media