இலங்கையில் 7 மாவட்டங்களுக்கு கனமழைக்கான அபாய எச்சரிக்கையை இலங்கை வளிமண்டல திணைக்களம் விடுத்துள்ளது.
அதன்படி, திருக்கோணமலை, பொலன்னறுவை, மாத்தளை, மட்டக்களப்பு, அம்பாறை, மொனராகலை, பதுளை ஆகிய மாவட்டங்களுக்கு மழைக்கான அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
நாட்டின் கிழக்குப் பகுதிகளில் மேகக் கூட்டத்தின் செல்வாக்கினால் 100 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சியும் ஊவா மாகாணம் மற்றும் மாத்தளை , பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow on social media