வீட்டில் தனிமையில் வாழ்ந்த பெண் தீயில் எரிந்து பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

வீடொன்றில் தனிமையில் வாழ்ந்த 69 வயதான பெண் ஒருவர் நேற்று இரவு தீ விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இரத்தினபுரி – எலபாத்த என்ற இடத்தில் இடம்பெற்றுள்ளது. பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய பொலிஸாரும் தீயணைப்பு பிரிவினரும் இணைந்து தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர்.

குறித்த பெண் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அந்த வீட்டில் எரிவாயு அடுப்பு அல்லது மின்சாரம் இல்லை என்று பொலிஸார் கூறுயுள்ளனர்.

தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், எலபாத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

Follow on social media
CALL NOW Premium Web Hosting