கருத்தரிக்க மருந்து உண்ட 23 வயது பெண் மரணம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

விரைவில் கருத்தரிப்பதற்காக உள்ளூரில் தயாரிக்கப்பட்ட மருந்தை உட்கொண்ட பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மின்னேரிய பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சிகிரியா பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய சதுனிகா விஜேரத்ன என்ற திருமணமான பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண்ணுக்கு மூன்று வருடங்களுக்கு முன்பு திருமணமாகியுள்ளதுடன், இதுவரையில் கருத்தரிக்காததால், தனது உறவினர் நடாத்தும் ஆலயம் ஒன்றுக்குச் சென்று மூன்று நாட்கள் அங்கு கொடுக்கப்பட்ட உள்ளூர் மருந்தை உட்கொண்டுள்ளார்.

அதனையடுத்து, இவர் உடல்நலக்குறைவு காரணமாக ஜெயந்திபுர வைத்தியசாலையில் திங்கட்கிழமை 10) அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Follow on social media
CALL NOW

Leave a Reply