நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நாட்டில் மேலும் 18 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று (02) இந்த மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 15,037 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 179 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 561,128 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 587,935 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Follow on social media
CALL NOWPremium Web Hosting