15 வயதும் 2 மாதங்களானசிறுமியை, சட்டரீதியான பொறுப்பாளர்களிடம் இருந்து பிரித்து துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தினார் என்றக்குற்றச்சாட்டின் கீழ் இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொனராகலை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ள இந்தசம்பவத்தில், 15 வயதான சிறுமியை தன்னுடைய வீட்டுக்கு அழைத்துச்சென்ற இளைஞன் சிறுமியை துஷ்பிரயோகம் செய்துள்ளார்.
இந்நிலையில் குறித்த இளைஞன் அச்சிறுமியுடன் காதல் உறவில் இருந்துள்ளமை கண்டறியப்பட்டது.
அதேவேளை சிறுமியிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், அயலில் வசிக்கும் ஒருவர் தன்னை 8 வயதில் துஷ்பிரயோகம் செய்துள்ளார் என்பதும் கண்டறியப்பட்டுள்ளது.
சம்பவங்கள் தொடர்பில் அவருடைய 19 வயதான காதலனும், சிறியவயதில் துஷ்பிரயோகம் செய்த 28 வயதான நபரும் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வைத்திய பரிசோதனைக்காக அச்சிறுமி, மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் கைதான சந்தேநபர்களை சியம்பலாண்டு வநீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
Follow on social media