இந்திய மீனவர்கள் 13 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இந்திய மீனவர்கள் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் சனிக்கிழமை (14) திகதி மீன்பிடித்த குற்றச்சாட்டில் குறித்த 13 பேரும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதோடு 3 படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ளதுடன் குறித்த மீனவர்கள், ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Follow on social media
CALL NOW

Leave a Reply