சந்நிதியான் ஆச்சிரமத்தில் தெய்வீக இன்னிசை விருந்தும், உதவிகளும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

சந்நிதியான் ஆச்சிரம சைவ கலை பண்பாட்டு பேரவையின் ஏற்பாட்டில் வாராந்தம் இடம் பெறும் நிகழ்வு இன்று காலை சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்னசத்திரம் மோகனதாஸ் சுவாமிகள் தலமையில் இன்று காலை 10:45 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரமத்தில் இடம் பெற்றது.

இதில் காரைநகர் கிழவங்காடு கலா மன்றத்தின் இசை அரங்கமும், திருவாசகக்குயில் லீலாவதி இராசரத்தினம் அவர்களின் பண்ணிசையும் இடம் பெற்றது.

இதேவேளை உதவிகளாக,
பருத்தித்துறை பிரதேச செயலகத்தின் கோரிக்கைக்கு அமைவாக, வீட்டுத்தோட்ட பயிர்ச் செய்கைக்காக 200 பயனாளிகளுக்கு தேவையான விவசாய உள்ளீடுகளிற்கான நிதியாக ரூபா 40,000, வழங்கிவைக்கப்பட்டதுடன். பண்டாரவளை – ப/ கிரேக் தமிழ்மகா வித்தியாலயத்தின் பயன்பாட்டிற்காக ரூபா 58,000 பெறுமதியான அச்சுஇயந்திரம் ஒன்றும்.

பாடசாலை முதல்வர் எஸ்.சவுந்தரராஜன் அவர்களிடம் வழங்கப்பட்டதுடன் காரைநகர் கிழவன்காடு கலாமன்ற தலைவர் அவர்கள் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி அன்னசத்திரம் மோகனதாஸ் சுனாமிகள் அவர்களால் அவர் கலாமன்றத்திற்க்கு ஆற்றிக்கொண்டிருக்கும் சேவைக்காக கௌரவிக்கப்பட்டார். இந் நிகழ்வில் சந்நிதியான் ஆச்சிரம தொண்டர்கள், நிர்வாகிகள், சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், காரைநகர் கிழவன்காடு கலா மன்றத்தினர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting