விமான விபத்தில் இருந்து நடிகை ரோஜா மயிரிழையில் உயிர் தப்பியுள்ளதாக இந்திய தகவல்கள் கூறுகின்றன. திருப்பதியில் தரையிறங்கிய விமானம் விபத்துக்குள்ளாக இருந்த நிலையில் விமானியின் சாமர்த்தியத்தால் விபத்தில் இருந்து தப்பியதாக கூறப்படுகின்றது.
நடிகை ரோஜா ராஜமுந்திரியில் இருந்து திருப்பதி சென்ற விமானம் திடீர் கோளாறு காரணமாக தரையிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டு திருப்பதியில் இருந்து பெங்களூருக்கு மாற்று வழியில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதன்போது விமானியின் சாதுரியத்தால் விமானம் விபத்துக்குள்ளானதில் இருந்து தப்பியுள்ளது. இதுகுறித்து ரோஜாவின் கணவர் ஆர்.கே. செல்வமணி கூறுகையில், தனியார் விமானத்திலிருந்து காலையில் ராஜ முந்திரியில் இருந்து திருப்பதிக்கு ரோஜா வருவதாக இருந்தது.
அதில் ரோஜா வந்த நிலையில் அவர் திருப்பதியில் தரையிறங்க வேண்டும். ஆனால் ரோஜா வந்த விமானத்தில் பிரச்னை என எனது வாட்ஸ்ஆப்புக்கு தகவல் வந்தது. பயந்து போய், உடனடியாக ரோஜாவை தொடர்பு கொண்டேன். ரீச் ஆகவில்லை.
பதறியடித்து எனக்கு தெரிந்தவர்களை தொடர்பு கொண்டு என்ன விவரம் என்று கேட்டேன். அவர்கள், விமானத்தில் பிரச்னை ஏற்பட்டதால் திருப்பதிக்கு வராமல் பெங்களூருவில் விமானம் தரையிறங்கியதாக தெரிவித்தார்கள்.
அதன் பின்னர் ரோஜாவை தொடர்பு கொண்டபோது போனை எடுத்து இன்னும் விமானத்திற்குள் இருப்பதாகவும், வெளியே வந்தபின்னர் பேசுவதாகவும் கூறியதாக ரோஜாவின் கணவர் செல்வமணி கூறியதாக அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
Follow on social media