யாழ்.கோப்பாய் பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 54 வயதான நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
சம்பவத்தில் ச.சின்னராசா (வயது54) என்பவரே படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றார்.
குறித்த நபருடைய வீட்டிற்குள் நேற்றுமுன்தினம் இரவு புகுந்த 8 பேர் கொண்ட வாள்வெட்டு குழு குறித்த தாக்குதலை நடத்தியுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
Follow on social media