தெரு நாய்க்கடி மற்றும் பூனையின் நக கீறல்களுக்கு உள்ளான 3 பிள்ளைகளின் தந்தை ஒருவர் நீர்வெறுப்பு நோயினால் உயிரிழந்துள்ளார்.
உரியவாறு தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாமல் இருந்தமையினாலேயே அவர் உயிரிழந்துள்ளதாக சட்ட வைத்தியர் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
யாழ்.கடற்கரை வீதியை சேர்ந்த அந்தோனி சூசைநாதன் (வயது 35) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
3 மாதங்களுக்கு முன்பு தெரு நாய் கடிக்கு உள்ளான குறித்த நபர் அதற்கான தடுப்பூசியை பெற்றுக்கொள்ளவில்லை.
அதேபோல் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு பூனையும் அவருக்கு நகங்களால் கீறியுள்ளது என்று விசாரணையில் தெரிவிக்கப்பட்டது.
அதற்கும் சிகிச்சை பெறாத நிலையில் பருத்தித்துறையிலுள்ள சகோதரி வீட்டில் தங்கிருந்தபோது அவருக்கு நேற்றிரவு திடீரென நடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அதனால் அவர் பருத்தித்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின் மேலதிக சிகிச்சைக்காக அவர் நேற்றுமுன்தினம் நள்ளிரவு
யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Follow on social media