யாழில் பட்டா மீது ரயில் மோதி கோரா விபத்து – ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ்ப்பாணம் – கொடிகாமம் – மிருசுவில் வைத்தியசாலைக்கு அருகில் இன்று முற்பகல் 11.30 மணியளவில் இடம்பெற்ற ரயில் விபத்தில் சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் மேலும் இருவர் படுகாயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியாசலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் தந்தை மற்றும் இரண்டு மகன்களே உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

கொடிகாமம் தவசிக்குளம் பகுதியை சேர்ந்த நாகமணி தயாபரன் (வயது 45) தயாபரன் தனுஷன் (வயது 15) மற்றும் தயாபரன் ஜனுசன் (வயது 12) ஆகிய மூவருமே உயிரிழந்துள்ளனர்

காங்கேசன்துறையில் இருந்து கொழும்பு நோக்கி இன்றைய தினம் (22) பயணித்த ரயிலுடன், கொடிகாமம் மிருசுவில் வைத்திய சாலைக்கு அண்மையில் உள்ள ரயில் கடவையில் பட்டா ரக வாகனம் மோதி விபத்துக்கு உள்ளானது.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். அண்மைக்காலமாக வட மாகாணத்தில் இவ்வாறான விபத்துக்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Follow on social media
CALL NOW

Leave a Reply