2021 ம் ஆண்டிற்கான தலை சிறந்த ஆசிரியத்துவத்திற்கான BIC Cristal Pen விருதினை யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு.இ.இரமணன் பெற்றுக் கொண்டுள்ளார்.
விசேடமாக கொவிட் -19 இடர் காலத்தில் தலை சிறந்த அர்ப்பணிப்புடன் எதிர்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றி கற்பித்தலில் புத்தாக்க முறைமைகளைப் புகுத்தி நிகழ்நிலை கற்பித்தலில் மாணவர்கள் வெற்றிகரமாக ஈடுபடுவதற்கான வழிவகைகளைக் கையாண்டு மாணவர்களை கல்வியின் பால் தூணடுவதன் மூலம் மாணவர்களுக்கும் சமூகத்திற்கும் கல்விப் பணியாற்றியமைக்காகவும் உலகின் அனைத்து தமிழ் மாணவர்களும் பயன்பெறும் வண்ணம் இலவசமாக ஆசிரிய பணியினை முன்னெடுத்தமைக்காகவும் வழங்கப்படுகிறது.
உலகளாவிய ரீதியில் அனைத்து நாடுகளிலுமிருந்து ஒவ்வொரு பிராந்தியங்களிலிருந்தும் தெரிவு செய்யப்பட்ட பத்து வெற்றியளர்களில் யாழ் இந்துக் கல்லூரி ஆசிரியர் திரு இ.இரமணன் தெரிவு செய்யப்பட்டமையை வரவேற்று யாழ் இந்துக் கல்லூரி சமூகம் பெருமையடைகிறது.
மேலும் இவ்விருதின் பிரகாரம் யாழ் இந்துக் கல்லூரிக்கு 5000 யூரோ பணமும் (ரூ. 1,150,000.00) 1000 அமெரிக்கடொலர் பெறுமதியான பொருட்களும் நன்கொடையாக வழங்கப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Follow on social media