புலமைப்பரீசில் பெறுபேறுகள் – வெட்டுப்புள்ளி வெளியிடு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

2021ம் ஆண்டுக்கான ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீசில் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகி உள்ளன. பரீட்சை பெறுபேற்றை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகப்பூர்வ இணையத்தளமான www.doenets.lk என்ற இணையத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

இதேவேளை, 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான தமிழ், மற்றும் சிங்கள மொழிமூல மாவட்ட ரீதியான வெட்டுப்புள்ளி வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு தமிழ் மொழிமூலம் 149, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார் ஆகிய மாவட்டங்களுக்கு 148 எனவும் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை, பதுளை, ஆகிய மாவட்டங்களுக்கு 147 ஆகவும், நுவரெலியா 146, வவுனியா 147 மற்றும் இரத்தினபுரிக்கு 145 ஆகவும் தமிழ் மொழி மூல வெட்டுப்புள்ளி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை , 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சைக்கான மீள் திருத்தத்திற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 31ஆம் திகதி வரை அனுப்பி வைக்க முடியும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting