புதுவருட விருந்துக்கு சென்றவர் சடலமாக மீட்பு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

2021 புதுவருட விருந்துக்கு சென்ற நான்கு பிள்ளைகளின் தந்தை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தார்.

ஹட்டன் தோட்டத்தை சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான 38 வயதுடைய ஆறுமுகன் குமார் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

2021 புது வருடத்தை முன்னிட்டு சக நண்பர்களோடு மதுபான பார்ட்டிக்கு நேற்று (31) இரவு 08 மணியளவில் வீட்டிலிருந்து சென்ற நிலையில் மீண்டும் வீட்டிற்கு வராதமையினால் தேடிய போதே தேயிலை மலையில் இறந்த நிலையில் கிடந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளார். மேலும் மதுபான பார்ட்டி முடிந்தவுடன் சகலரும் கலைந்து சென்றுவிட்டதாக பார்ட்டியில் கலந்து கொண்ட ஒருவர் தெரிவித்துள்ளார்.

பார்ட்டி இடம்பெற்ற சில மீட்டர் தூரத்தில் தேயிலை மலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

ஹட்டன் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு சடலம் டிக்கோயா மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் என ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply