நயன்தாரா இடத்தை பிடிக்கும் ஜான்வி கபூர்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

நயன்தாரா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் ரீமேக்கில் பிரபல நடிகை ஒருவர் நடிக்க தயாராகி வருகிறார்.

தற்போது ரஜினியின் படத்திற்காகத் திரைக்கதையை எழுதிவரும் நெல்சன் இயக்கிய முதல் படம் கோலமாவு கோகிலா. நயன்தாரா நடித்திருந்த இந்தப்படம் சூப்பர் ஹிட்டானது. நகைச்சுவையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நயன்தாராவுக்கும் நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.

பிற மொழிகளில் ரீமேக் செய்யப் பலரும் ஆசைப்பட்டனர். இந்தியில் தற்போது அதற்கான வேலைகள் நடந்து வருகிறது. நயன்தாரா நடித்த கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார். விரைவில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதால் உடற்பயிற்சி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். சமீபத்தில் ஜிம்மில் எடுத்த புகைப்படத்தை சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார் ஜான்வி.

Follow on social media
CALL NOW

Leave a Reply