தேவையை புரிந்து மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு வைத்தியசாலை திறப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

கடவத்தை, மஹர பிரதேச மக்களுக்கு அத்தியவசியமான சுகாதார வசதிகளுடனான வைத்தியசாலை ஒன்று கிடைக்கப்பெற்றமை தொடர்பில் தான் மகிழ்ச்சி அடைவதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று (29) தெரிவித்துள்ளார்.

மஹர ரோஸ்வுட் தனியார் வைத்தியசாலையின் புதிய வார்ட்டு வளாகம், இரசாயன ஆய்வுக்கூடம் என்பவற்றை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.

மாகாணத்தின் தேவையை புரிந்துக்கொண்டு மக்களுக்கு சேவை செய்யும் பொருட்டு இந்த வைத்தியசாலையை திறந்து வைப்பது குறித்து ரோஸ்வுட் நிர்வாக பணிப்பாளர் வைத்தியர் அசேல விஜேசுந்தரவிற்கு நாம் நன்றி செலுத்த வேண்டும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

வைத்தியர் அசேல விஜேசுந்தர, தன்னை பல் வைத்தியர் என்பதைவிட ஒரு கலைஞராகவே அடையாளப்படுத்திக் கொண்டதாக நினைவுபடுத்தியதுடன், அசேல விஜேசுந்தர தனது பிறப்பிடமான குருநாகல், மஹவ, நாகொல்லாகம பிரதேசத்தில் உள்ள கிராமப்புற சூழல் காரணமாக அவர் வைத்தியத்துறையிலும், கலைத்துறையிலும் ஒரே மாதிரியாக தேர்ச்சி பெற்றுள்ளார் என நான் நம்புகின்றேன்.

அவ்வாறானதொரு நபரின் கரங்களினால் மஹர பிரதேசத்திற்கு இவ்வாறான வைத்தியசாலை ஒன்று கிடைக்கப்பெற்றமை தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

குறித்த நிகழ்வில் கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி தேரர், கடவத்த பிம்பாராமய விகாராதிபதி ஹுரிகஸ்வெவே சத்தாவாச தேரர், ஜனாதிபதி சட்டத்தரணி பிரசன்ன லால் த அல்விஸ், தேஷய நூலாசிரியர் ரஞ்சித் ஆனந்த ஜயசிங்க, கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சஹன் பிரதீப், பியகம பிரதேச சபையின் தலைவர் கனேபொல, வைத்திய நிபுணர் விஜித் குணசேகர, விஷாரத அமரசிறி பீரிஸ் உள்ளிட்ட கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் பலர் கலந்துக் கொண்டனர்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply