பிரித்தானியாவை சேர்ந்த வடிவழகி மற்றும் திரைப்பட நடிகையான ஏமி ஜாக்சன் (Amy Jackson) மதராசபட்டணம் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட உலகில் அறிமுகமானார்.
1947 ம் ஆண்டு கதைக்களத்தில் உருவாக்கப் பட்ட இந்த படத்தில் இவரது நடிப்பு சிறப்பாக அமைந்ததைத் தொடர்ந்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
இதன்பின்னர் தமிழில் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் முன்னணி நடிகருடன் கோடியாக நடித்து பிரபலமானார்.
நடிகை எமி ஜாக்சன், ஜார்ஜ் பெனாய்டோ என்பவரை காதலித்து வந்தார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார். இதனால் நடிப்பதில் இருந்து விலகியிருந்தார். பின்னர் கடந்த 2019ம் ஆண்டு இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.
இதையடுத்து திடீரென தனது காதல் கணவரை விவகாரத்து செய்துவிட்டு மகனுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தற்போது ஏமி ஜாக்சன் பிரபல நடிகர் ஒருவரை காதலித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இதேவேளை தற்போது நடிகை ஏமி ஜான்சனின் சொத்து மதிப்பு தொடர்பில் இணையத்தில் தகவல் ஒன்று கசிந்துள்ளது.
இதன்படி அவரின் முழு சொத்து மதிப்பு மாத்திரம் சுமார் ரூ. 37 கோடி இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது.
Follow on social media