நாடளாவிய ரீதியில் தற்போது அமுல்படுத்தப்பட்டு வரும் மின் துண்டிப்பு காரணமாக இணையவழி கற்பித்தல் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.
இலங்கை ஆசிரியர் சங்கம் இதுகுறித்த குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது.
இணையவழி கற்பித்தலுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப உபகரணங்களை செயற்படுத்துவதற்கு மின்சாரம் தேவைப்படுவதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
மேலும், ஒவ்வொரு பகுதியிலும் வெவ்வேறு நேரங்களில் மின் துண்டிப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளமையினால், தொலைதூர பகுதிகளிலுள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஒரே நேரத்தில் இணையவழி கற்பித்தலில் ஈடுபடுவதற்கு இடையூறு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களும் மின்வெட்டினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
Follow on social media