நடிகரும் தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் நடிப்பில் கவனம் செலுத்த இருக்கிறார்.
இயக்குநர் விஜய் மில்டன் இயக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்தில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்து வருகிறார். விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கும் இந்தப் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் விஜயகாந்தை நடிக்க வைக்க இருக்கிறார்.
விஜய் மில்டன் ஏற்கனவே கன்னடத்தில் சிவராஜ்குமாரை வைத்து ஒரு அதிரடிப்படத்தை எடுத்து முடித்திருக்கிறார். இப்போது விஜய் ஆண்டனியை வைத்து எடுத்து வரும் தமிழ்ப் படத்தில்தான் விஜயகாந்த்தை ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் மீண்டும் நடிக்க வைக்கக் கேட்டிருக்கிறார்.
இதே படத்தில் சரத்குமார் ஒரு கேரக்டரில் நடித்து முடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow on social media