யாழ் பல்கலைக்கழகத்தை நாசமாக்கும் துணைவேந்தர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழ் பல்கலைக்கழகமானது ஒரு உயரிய நோக்கத்துடன் ஸ்தாபிக்கப்பட்டிருந்தாலும் கூட, காலத்துக்குக்காலம் அதன் மகிமைக்கு அவலம் ஏற்படுவது வழமையாகிப்போய் விட்டது.

அண்மைக்காலமாக அரசாங்கத்தால் பதவியில் இருத்தப்படும் துணைவேந்தர்களே, இந்தப்பல்கலைக்கழகத்தின் எழுச்சிக்கும் சவாலாக இருந்தனர், இருக்கின்றனர். ஆனால் கடந்த 4 1/2 வருடங்களாக துணைவேந்தராக பதவியிலிருக்கும் சிறிசற்குணராசா முன்னெப்போதும் இல்லாதவாறு இந்தப்பல்கலைக்கழகத்தின் நிதி, நிர்வாக, ஒழுங்கு மற்றும் கலாச்சார விழுமியங்களை மிகக் கடும் சவாலுக்கு உட்படுத்தி வருவதுடன் இந்தப்பல்கலைக்கழகத்தினதும் அது சார்ந்த சமூகத்தினதும் துறை சார்ந்த வீழ்ச்சியை ஏற்படுத்தி வருகின்றார்.

பலத்த அரசியல் ஆதரவுடன் கோத்தபாயவால் துணைவேந்தராக நியமிக்கப்படட இவர், தொடர்ச்சியாக பல்வேறுபட்ட சர்ச்சைகளிலும் பிரச்சனைகளிலும் சிக்கி முழுப்பல்கலைக்கழகத்துக்கு மட்டுமன்றி, தமிழ் கல்விச்சமூகத்துக்கும் அவப்பெயரையும் தீராத களங்கத்தையும் ஏற்படுத்தி வருகின்றார்.

இவரின் கட்டப்பஞ்சாயத்து நிர்வாகத்தில் ஊழல், நிதி மோசடி, நிர்வாகச்சீர்கேடுகள், ஒழுங்கீனம், தற்புகழ்ச்சி செயற்பாடுகள் என்பன மலிந்து கிடக்கின்றன. அவருக்கு ஜால்ரா அடித்து அண்டிப்பிழைக்கும் ஒரு கூட்டம் பதவி , பணம் மற்றும் புகழுக்காக அவரைச்சூழ இருந்து இயக்கி அண்டிப்புழுகி கெடுவார் கேடு சூழ்வாராக அவரை மாற்றி வைத்திருக்கின்றது.

பேரவையிலுள்ள சில உறுப்பினர்களின் பதவி வெறி, பணத்தாசை என்பவற்றுக்கு சரியாகத்தீனி போடும் சக்கர், அற்ப உறுப்பினர் பதவிகளையும், நட்ச்சத்திர ஹோட்டல் சாப்பாடுகளையும் பொதுமக்களின் வரிப்பணத்திலிருந்து அவர்களுக்கு அள்ளி இறைத்து அவர்களை தனது தலையாட்டிகளாக மாற்றி வைத்திருக்கின்றார். இதன் மூலம் தனக்கு வேண்டியவற்றை செய்யவும் வேண்டாதவர்களை முறையற்றுத்தண்டிக்கவும் பழிவாங்கவும் சக்கரால் முடிகின்றது.

போதைவஸ்து வியாபாரம் மற்றும் நுகர்வு என்பவற்றில் ஈடுபட்டு வந்த மாணவர்கள் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு FIR போடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த சமயம், விஞ்ஞான பீடாதிபதி ரவிராஜன் என்ற தனது இன்னொரு அல்லக்கை தலையாட்டியை அனுப்பி ஒழுங்கீனமாகமாகவும் சட்டத்துக்கு முரணாகவும் அவர்களை விடுவித்தார். இது போன்ற சம்பவங்களால் இன்று போதைவஸ்துப்பாவனை யாழ் பல்கலைக்கழகத்திலும் அதனைச் சூழவும் சர்வ சாதாரணமாகி விட்டது. யாழ் பல்கலைக்கழகம் போதைவஸ்து கிட்டங்கியாகப் பாவிக்கப்படத்தொடங்கி விட்டது.

அண்மையில் பட்டப்பிடிப்புகள் பீடத்திற்குரிய பீடாதிபதி தெரிவு இடம்பெற்றது. இதில் சிரேஷ்ட பேராசிரியர் வேல்நம்பி, பேராசிரியர் கஜபதி , மற்றும் பேராசிரியர் வேலாயுதமூர்த்தி என்ற மூவர் பீடாதிபதிப்பதவிக்குப்போட்டியிட்டனர். பேராசிரியர் வேல்நம்பி மூன்று தடவைகள் முகாமைத்துவ பீடாதிபதியாக இருந்தவர். இந்தியாவில் PhD பட்டம் பெற்றவர். 130க்கு மேற்பட்ட ஆராய்ச்சி மாணவர்களை மேற்பார்வை செய்தவர். பேராசிரியர் கஜபதி பதவிகள் எதனையுமே வகிக்காதவர். விலங்கு சார்ந்த ஆராய்ச்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர். ஆராய்ச்சி மானிய நிதிகளை அரசிடமிருந்து பெற்று ஓரிரு பட்டமேற்படிப்பு மாணவர்களை supervise செய்பவர்.

இரசாயனவியல் விரிவுரையாளரான பேராசிரியர் வேலாயுதமூர்த்தியின் மிகப்பெரிய தகுதி சக்கரின் வலதுகை (அல்லக்கை) என்பதே. இவர் எந்தப் புலமைப்பரிசிலும் பெறவில்லை. எந்த வெளிநாட்டிலும் படிக்கவுமில்லை. எந்த மாணவர்களையும் நேரடியாக எந்த ஒரு பட்டத்துக்கும் supervise செய்யவுமில்லை. இரசாயனவியல் துறையில் முதல் வகுப்பில் சித்தியடையாமல் பேராசிரியர் பதவியைப்பெற்றவர் இவர் ஒருவர் மட்டும் தான். இவர் விரிவுரையாளராக எடுபட்டதே அரசியல் மூலம் தான். பதினைந்து வருடங்களுக்கு முன்னர், அரசியல் மூலம் தகுதி வாய்ந்த அனைத்து விண்ணப்பதாரிகளையும் முறையற்றவிதத்தில் வேண்டுமென்றே புறந்தள்ளிவிட்டுதான் இவர் விரிவுரையாளராகத் தெரிவு செய்யப்பட்டார்.

விண்ணப்பதாரிகளில் இதே batch இல் batch top எடுத்த, தற்போது வடக்கு கல்விப்புலத்தில் Deputy Director ஆக உள்ள பெண்மணி, வெளிவிவகார அமைச்சில் பணிப்பாளராக கடமை புரியும் பெண்மணி, தரமான UK பல்கலைக்கழகங்களில் தற்போது பேராசிரியர்களாக இருக்கும் இரு பெண்மணிகள் எல்லாம் அடக்கம். கல்வி கற்பிக்கும் துறைத்தலைவரினதும் சிரேஷ்ட விரிவுரையாளர்களினதும் வீடுகளுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் சென்று அவர்களின் வீட்டு வேலைகள் செய்யும்போது, தன்னுடன் ஒன்றாகப் படிக்கின்ற மிகவும் திறமையான அதிக புள்ளிகளை பெற்றுக்கொள்ளும் மாணவர்களைப்பற்றி மிகப் பொய்யாக, கோள் சொல்லி அவர்களின் புள்ளிகளை வெட்டிக் குறைப்பித்து அவர்களை முதலாம் தரச் சித்தி எதுவுமே எடுக்காமல் வெளியே தள்ளிவிடுவது இவருக்கு கை வந்த கலை. தன்னை விட மிகத்திறமையான இரு மாணவிகளையும் இரு மாணவர்களையும் அப்போதைய துறைத்தலைவர் திருமதி மகேஸ்வரன் மூலம் சூழ்ச்சி செய்து அறுத்து விழுத்தி விட்டும் கூட வேலாயுதமூர்த்தியால் அவர்களின் புள்ளிகளை எட்டியும் பிடிக்க முடியவில்லை என்பதை அந்த பிரிவு மாணவர்கள் இன்னமும் கவலையுடன் நினைவு கூறுகின்றார்கள்.

தன்னை மட்டுமே எடுக்கக் கூடியதாக ஒரு விளம்பரத்தை உயர் நிலை அனுசரணையுடன் தயார் செய்து அதனைப்பயன்படுத்தி தகுதியான அனைவரையும் தள்ளி விட்டு விட்டுத் தனது குடும்ப அரசியல் செல்வாக்கையும் பணபலத்தையும் மூலதனமாகப் பயன்படுத்தி பின்கதவால் விரிவுரையாளர் ஆனவர் தான் வேலாயுதமூர்த்தி. இவ்வாறு இவரால் முறையற்ற விதத்தில் புள்ளிகளால் வஞ்சித்து வெளியேற்றப்பட்டவர்கள் பின்னர் தமது விடா முயற்சியால் முன்னேறி இன்று கல்விப்பணிப்பாளர்களாகவும், வெளிநாட்டு அலுவல்கள் பணிப்பாளர்களாகவும், மிகப்பிரபல்யமான இரசாயனவியல் தனியார் கல்வி ஆசிரியர்களாகவும் செழிப்பாக மற்றவர்களுக்கு முன்மாதிரியாகவும் வாழ்கின்றார்கள். ஏனையோர் வெளிநாட்டுப்பல்கலைக்கழகங்களில் கலாநிதிப்படிப்புகளை முடித்து அங்கேயே தொழிலும் பெற்று சிறப்புற உள்ளார்கள். தனிப்பட்ட வாழ்க்கையிலும் வேலாயுதமூர்த்தி மிகவும் ஒழுங்கீனமானவர் என்றாலும் அது பற்றி இங்கு குறிப்பிட கட்டுரையாளர் விரும்பவில்லை. விரிவுரையாளராகிய பின்னர் அப்போதைய இரசாயனவியல் துறை தலைவர் திருமதி மகேஸ்வரன், அப்போதைய விஞ்ஞான பீடாதிபதி சக்கர் ஆகியவர்களுக்கு சரீர மற்றும் வீட்டுத்தொண்டுகள் பல செய்தவண்ணம் உள்நாட்டிலேயே PGD படித்த வேலாயுதமூர்த்தி, பின்னர் தன்னுடைய தகுதியை மீறிய பல பீடம் சார்ந்த பதவிகளை வேண்டிக் கேட்டுப் பெற்றுக்கொண்டிருந்தார். இதன் போது மேற்குறித்த பதவிகளுக்கு தகுதியான பலர் நிர்வாகத்தால் சகட்டுமேனிக்கு நிராகரிக்கப்பட்டிருந்தனர்.


இற்றைக்குப் பத்தாண்டுகளுக்கு முன்னர் சீன நிறுவனங்களின் மின் உற்பத்தியினால் சுன்னாகம் கிணறுகளில் எண்ணெய்க்கழிவுகள் மிதமிஞ்சிக் கலந்துள்ளநிலையில் அந்த நீரைக் குடித்து ஏராளமான மக்கள் வைத்தியசாலைகளில் நோய் வாய்ப்பட்டு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தனர். சிலர் நோய் கடுமையாகி இறந்தும் போயினர். இதனை ஆராய என்று அமைக்கப்பட்ட “நிபுணர் குழுவில்” உயர்மட்ட பரிந்துரை மூலம் சேர்ந்து கொண்ட வேலாயுதமூர்த்தி “சுன்னாகம் கிணற்று நீரை மக்கள் குடிக்கலாம்” என்று அரசாங்கத்துக்கு பச்சைப்பொய்யை பரிந்துரையாக எழுதி வடக்கு மாகாண விவசாய அமைச்சிடமிருந்து இலட்சக்கணக்கான பணத்தையும் பெற்றுக்கொண்டார். பணத்துக்காகவும் அரசியலுக்காகவும் உண்மையை மறைத்து மக்களின் வயிற்றில் அடித்தமைக்காக சுன்னாகம் பிரதேச மக்களினால் தூஷிக்கப்பட்டதான சர்ச்சைகளில் நெடுங்காலம் சிக்கி இருந்தார்.

இதனால் பல்கலைக்கழக வட்டத்தில் இவருக்கு “பச்சைத்தண்ணி” என்றும் ஒரு பெயர் உண்டு.
சக்கர் துணைவேந்தரானதும் அவரின் தயவில் பேரவை உறுப்பினராகிய வேலாயுதமூர்த்தி எல்லா அரச சலுகைகளையும் சக்கரினூடு பெற்றுக்கொண்டார். விஞ்ஞானபீடத்தில் வெளிநாடுகளின் உயர்தரப்பல்கலைக்கழகங்களில் PhD பட்டம் பெற்ற, பல மதிப்பார்ந்த புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொண்ட மிகத்திறமையான பேராசிரியர்கள் யாழ் பல்கலைக்கழகத்தில் கணிசமான அளவில் இருந்தபோதும், சக்கருடன் இவர் கொண்ட நீண்டகால நெருக்கமே, வெளிநாட்டுப்படிப்பு எதுவுமின்றி பேரவையின் உறுப்பினர் பதவியைப் பெறச் சாத்தியமாக்கியது. எந்தவிதமான வெட்கம் ரோஷம் என்பவற்றைப்பற்றிக் கவலைப்படாமல் பதவியிலுள்ளவர்களின் வீட்டு வேலைகள் முதற்கொண்டு அவர்களின் பிள்ளைகளின் கல்வி விடயங்கள், குடும்ப உறுப்பினர்களின் சுகவீனமான நேரங்களில் மூன்று நேரங்களும் சாப்பாடு விநியோகம் போன்ற செயல்களால் சக்கரின் செல்லப்பிள்ளையானார். அதனை விட சக்கரின் பிரச்சாரங்களுக்கும் தனக்குப்பிடிக்காதவர்களை வசை பாடும் “VC மீடியா” ஆட்களை வழி நடாத்தும் பொறுப்பையும் கன கச்சிதமாக செய்து வந்தார். சக்கர் பேரவையில் செய்யும் எல்லா ஒழுங்கீனங்களையும் நிதி மோசடிகளையும் கடந்த 4 1/2 வருடங்களாக கண்ணை மூடிக்கொண்டு கை உயர்த்தி ஆதரிப்பதை விட வேலாயுதமூர்த்தி பேரவைஉறுப்பினராக வேறு எதுவுமே செய்யவில்லை. இதற்கு கைமாறு செய்வதற்காக மட்டுமன்றி பட்டப்பின் படிப்புகள் பீடத்தின் பாரிய நிதியினை தானேநேரடியாகக் கையாண்டு கையாடலுக்கு வசதியாகவும் இருப்பதற்கு, வேலாயுதமூர்த்தியை பீடாதிபதியாக்குவதற்கு சக்கர் முடிவெடுத்தார்.

தகுதிக்கு மீறி பதவியாசை பிடித்த வேலாயுதமூர்த்தியின் நெடுநாளைய வேண்டுகோளுக்காகவும் தனக்கு எடுபிடி வேலைகள் செய்தமைக்காகவும் எல்லாப்பேரவை உறுப்பினர்களுக்கும் தானே முன்னின்று பிரச்சாரம் செய்தார் சக்கர். மிகச்சிறந்த கெட்டிக்காரன் என்று புழுகித்தள்ளினார். இரவு பகலாக சக்கரும் வேலாயுதமூர்த்தியும் பேரவை உறுப்பினர்களை மொய்த்தனர். தொலைபேசினர். நினைக்க முடியாத சலுகைகளையும் பதவிகளையும் வழங்குவதாக வாக்குறுதியளித்தனர். கொழும்பிலுள்ள மூன்று பேரவை உறுப்பினர்களின் வீடுகளுக்கும் வேலாயுதமூர்த்தியை சக்கரே முன்னின்று பல்கலைக்கழக உத்தியோகபூர்வ வாகனத்தில் இரு தடவைகள் அனுப்பி பிரசாரம் செய்வித்தார். ஒரு நாளும் பேரவைக்கூட்டத்துக்கு நேரடியாக சமூகமளிக்காத குமுது மற்றும் ரூபசிங்க என்னும் இரு ஓய்வு நிலை பல்கலைசேவையாளர்களையும் பீடாதிபதித்தேர்தலுக்கு முதல் நாள் விசேட குளிரூட்டப்பட்ட வாகனத்தில் யாழ்ப்பாணம் அழைத்து வந்து சொகுசு ஹோட்டல்களில் தங்க வைத்தார் சக்கர்.

அரச பணத்தில் இரவிரவாக கச்சேரி நடத்தினார். அடுத்த நாள் வேலாயுதமூர்த்தி வீட்டிலிருந்து சென்ற சிறப்பு காலை உணவுடன் அவர்கள் விசேட வாகனத்தில் பல்கலைக்கழகம் அழைத்து வரப்பட்டனர். பீடாதிபதிப் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில், வருகை தந்த இரு பேராசிரியர்களான வேல்நம்பி மற்றும் வேலாயுதமூர்த்தி ஆகியோர் தமது விளக்கவுரையை ஒளிப்பட slide களாக அளித்தனர். இந்த விளக்கவுரையில் பேரவையுறுப்பினர்கள் தனக்கே வாக்கு செலுத்த வேண்டுமென்பதற்காக வேலாயுதமூர்த்தி, சக்கருடன் சேர்ந்து மிகப்பெரிய தண்டனைக்குட்படுத்தக்கூடிய மோசடி (fraud) ஒன்றைப்புரிந்துள்ளமை தற்போது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. பௌதீகவியல் பேராசிரியரான விக்னரூபன், தனது PhD படிப்பை அமெரிக்காவில் படித்தவர். அந்த அறிவைப்பயன்படுத்தி அவர் விஞ்ஞான ஆராய்ச்சிக்காகவென தானே தனியாக முயன்று எண்பது மில்லியன் இலங்கை ரூபா பெறுமதியான முதலீடு ஒன்றை அமெரிக்க ஆராய்ச்சி நிதியத்திடமிருந்து பெற்றார். இந்த நிதியத்தைப்பயன்படுத்தி நவீன பௌதீகவியல் ஆய்வுகூடமொன்றை யாழ் பல்கலைக்கழகத்தில் அமைத்த பேராசிரியர் விக்னரூபன், இரு மாணவர்களை பௌதீகவியல் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுத்தி MPhil பட்டமும் வழங்கியிருந்தார். அவர்களில் ஒரு மாணவரை பௌதீகவியலில் PhD செய்வதற்காக தானே மீண்டும் அமெரிக்கா அழைத்துச்சென்றிருந்தார். இதையறிந்த வேலாயுதமூர்த்தி, தானே இந்த நிதியினை நேரடியாக அமெரிக்காவிடமிருந்து பெற்றதாகவும், மற்றும் இந்த பௌதீகவியல் ஆய்வு கூடங்களை தானே கட்டியதாகவும், இந்த மாணவர்களைத் தானே supervise செய்ததாகவும், தானே அவர்களில் ஒருவரை PhD க்கு அமெரிக்கா அனுப்பியதாகவும் பச்சைப்பொய்யை தனது 15 நிமிட slide presentation இல் காட்டி எல்லாப்பேரவை உறுப்பினர்களையும் அப்பட்டமாக ஏமாற்றி உள்ளார். உண்மையில் வேலாயுதமூர்த்திக்கு ஒரு proposal எழுதக்கூடிய அறிவோ ஆற்றலோ இல்லை. அதற்குரிய அடிப்படைப்பயிற்சியும் இல்லை. பேராசிரியர் விக்னரூபன் பெற்ற நிதிக்குரிய proposal இல் என்ன இருக்கின்றது என்பதே தெரியாது. அந்த நிதியினை பெற்றதும் தனது மாணவர்களில் ஒருவரை மேற்குறித்த ஆய்வு கூடத்தில் பயிற்றுவிக்க பேராசிரியர் விக்னரூபனால் நியமிக்கப்பட்ட பல பேரில் இவரும் ஒருவர். அவ்வளவு தான். பேரவை உறுப்பினர்களில் ஒருவர்கூட "எவ்வாறு இரசாயனவியல் துறையைச்சேர்ந்த வேலாயுதமூர்த்தி ஒரு மாணவனை பௌதீகவியலில் MPhil பெற supervise செய்ய முடியும்" என்று நேரடியாக அவரிடம் கேட்கவில்லை. கேட்பதற்கு சக்கரும் விடமாட்டார். வேலாயுதமூர்த்தியின் இந்த சுத்துமாத்தினை பிழை என்று நன்கு தெரிந்திருந்தும் கூட சக்கர் அமைதியாக வாய் மூடி இருந்ததன் மூலமும் வேலாயுதமூர்த்திபற்றி இதற்கு முந்தைய பல பேரவைக்கூட்டங்களில் பேரவை உறுப்பினர்களிடம் வெளிப்படையாகவே "பட்டப்பின் படிப்புகள் பீடத்துக்கு தகுதியான ஆள்" என்று சிலாகித்து பேசியதன் மூலமும் தானும் இந்த ஒழுக்கக்கேட்டுக்கு உடந்தையாக இருந்தார். ஆனால் இந்த ஏமாற்றை பேரவை உறுப்பினர்கள் மிகச்சரியாக விசாரித்தறிந்தது மட்டுமன்றி பேரவைக் கூட்டத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் அனுபவம் மிக்க பேராசிரியர் வேல்நம்பியை கூடிய வாக்குகள் வித்தியாசத்தில் பீடாதிபதியாகத் தெரிவு செய்து, வேலாயுதமூர்த்தியைத் தோல்வியடையச்செய்து அவரிின் முறைகேட்டுக்குத் தகுந்த பரிசை அளித்தனர். இந்த மோசடிச் செயலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பேராசிரியர் விக்னரூபன் பேரவைக்கு காட்டமாக ஒரு கடிதத்தையும் அனுப்பி இருக்கின்றார். வேறு ஒழுங்கான பல்கலைக்கழகங்களாயின் இந்நேரம் சக்கரையும் வேலாயுதமூர்த்தியையும் வேலையை விட்டே தூக்கி தண்டித்து இருப்பார்கள். வெளிநாடுகளாயின் அவர்களே ராஜினாமா செய்துவிட்டு கண்ணியத்துடன் போய் இருப்பார்கள். இங்கே தெரு நாய்கள் எலும்புத்துண்டுக்கு அலைவதைப்போல் தகுதி இல்லாதவர்கள் பதவிக்கு அலைவதை உலகில் வேறு எங்குமே காண முடியாது. துணைவேந்தருக்குரிய நடுநிலை, அறம் என்பன தவறி, மிகப்பெரிய மோசடி ஒன்றின் மூலம் பட்டப்படிப்புகள் பீடத்தின் பீடாதிபதிப்பதவியை தான் சொல்வதெல்லாவற்றையும் மறுபேச்சின்றி செய்யக்கூடிய தலையாட்டி ஒருவரை, நியமித்து பல நிதி மற்றும் நிர்வாக முறைகேடுகளை மேற்கொள்ளவிருந்த சிறிசற்குணராசாவின் அனைத்துத்திட்டங்களும் பெரும்பான்மையான பேரவை உறுப்பினர்கள் பொறுப்புணர்ந்து செயற்பட்டமையால் தற்போது தகர்ந்து போயுள்ளன.
— நீரஜன்–

Follow on social media
CALL NOW

Leave a Reply