திருகோணமலையில் இளைஞனை கடத்தி உடலுறுப்புகளை திருடிய கொடூரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

மனநலம் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞனை கடத்திச் சென்று இரண்டு கண்கள், மற்றும் சிறுநீரகங்களை அறுத்தெடுத்து உயிரோடு கொன்று வீசிய கொடூர சம்பவம் ஒன்று மூதூர் பகுதியில் நேற்று முந்தினம் நிகழ்ந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,

கடந்த நான்கு நாட்களிற்கு முன்னர், மூதூர் பிரதேசத்தை சேர்ந்த 18 வயதான மனநலம் சற்று பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞன் ஒருவரை மூவர் அடங்கிய குழு ஒன்று வான் ஒன்றில் கடத்தி சென்றதாக தெரியவருகின்றது.

பின்னர் நேற்று முந்தினம் மூதூர் பகுதியிலுள்ள நீரோடை அருகே குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் கண்கள் தோண்டி எடுக்கப்பட்ட நிலையிலும், சிறுநீரகங்கள் அகற்றுவதற்கு மேற்கொள்ளப்படும் சத்திரசிகிச்சை காயங்களும் காணப்பட்டதாக சடலத்தை நேரில் பார்த்தவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

Follow on social media
CALL NOW Premium Web Hosting