யுகேந்திரன், வினுஷாவுக்கு பிக்பாஸ் கொடுத்த சம்பளம் இத்தனை லட்சமா?

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பிக்பாஸ் சீசன் 7 உலக நாயகன் கமல் ஹாசன் தொகுத்து வழங்கப்பட்டு சிறப்பாக ஒளிப்பரப்பாகி கொண்டிருக்கிறது. போட்டியாளர்களிடையே இரு வீட்டில் நடக்கும் பிரச்சனை சண்டைகள் ரசிகர்களுக்கு சுவாரஷ்யத்தை ஏற்படுத்தி வருகிறது.

ஏற்கனவே விஜய் வர்மா வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட நிலையில், கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் இருந்துள்ளது. யாரும் எதிர்ப்பார்க்காத வண்ணம் யுகேந்திரன் மற்றும் வினுஷா எவிக் செய்யப்பட்டு வீட்டைவிட்டு வெளியேற்றி அனுப்பி வைத்தார் கமல் ஹாசன்.

இந்நிலையில் இருவரும் 29 நாட்கள் இருந்த நிலையில், அவர்கள் இத்தனை நாட்களுக்கு வாங்கிய சம்பள விவரம் வெளியாகியுள்ளது.

நடிகர் யுகேந்திரனுக்கு ஒரு நாளைக்கு 27 ஆயிரம் சம்பளம் என ரூ. 7 லட்சமும், நடிகை வினுஷா ஒரு எபிசோடுக்கு ரூ. 20 ஆயிரம் என ரூ. 5 லட்ச ரூபாயையும் வாங்கியுள்ளார்களாம்.

பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேறிய யுகேந்திரன் அவரது சமுகவலைதள பக்கத்தில் ”முடிந்த வரை முயற்சி செய்வோம் முடிவுகளை ஏற்றுக் கொள்வோம்!” என்ற பதிவினை சிரித்தவாறு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்திருந்தார்.

Follow on social media
CALL NOW

Leave a Reply