முல்லைத்தீவு வற்றாப்பளை ஆலயத்தின் வருடாந்த உற்சவத்திற்கு சென்று திரும்பிய இளைஞன் விபத்தில் பலியாகியுள்ளான்.
உந்துருளியில் ஒட்டுசுட்டான் மாங்குளம் வீதியில் ஒலுமடு பகுதியில் விபத்துக்குள்ளாகிய இளைஞன் வாய்க்காலினுள் வீழ்ந்து பலியாகியுள்ளான்.
இன்று அதிகாலை இடம்பெற்றிருக்கலாம் எனத் தெரிவிக்கும் பொது மக்கள் நித்திரை காரணமாக இவ்விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
பலியான இளைஞன் தொடர்பான மேலதிக விபரங்கள் உடனடியாக பெற்றுக்கொள்ள முடியவில்லை.
Follow on social media