குடும்பத்தினரின் கவனயீனத்தால் மாணவி அநியாயச் சாவு!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

காரைதீவில் மரணமடைந்த செல்வி நடேஸ்வராசா அக்சயாவின் மரணம் ,குடும்பங்களுக்கு ஒரு எச்சரிக்கையை விட்டுச் சென்றுள்ளது,தாய் மடுவத்தை ஆஸ்பத்திரியில் தாதி. அன்று இரவு நேர வேலை, காலை 5மணிக்கு ரியூசன் என்பதால் 4மணிக்கு குளிக்கப் போகிறாள்.

புதிய வீட்டுக்குள் அப்பாவும்,அண்ணாவும்,அம்மம்மாவும் நித்திரை என்பதால் அவர்களுக்கு இடைஞ்சல் கொடுக்காமல் பழைய வீட்டுக்குள் இருந்த பாத்றூமில் குளிக்க ஆயத்தமாகிறாள்,குளித்துக்கொண்டிருந்த பிள்ளை வெளிச்சம் போதவில்லை என்பதால் ஈரக் கையுடனும் நனைந்த உடலுடனும் போய் ப்ளக்கைப் போடுகிறாள்.

இரவு முழுவதும் மின்கசிவில் இருந்த ப்ளக் வெடித்துப் பறந்து மின்சாரம் பிள்ளையை தூக்கி எறிகிறது. பிள்ளை மயக்க நிலையில் கிடக்கிறாள் வயர் முழுவதும் எரிந்து மேலே செல்கிறது அங்கே குப்பையும் கூழமுமாக கிடந்த பொலித்தீன் பைகள்,வயர்கள் எல்லாவற்றிலும் நெருப்புப் பிடித்து உருகி உருகி மயக்க நிலையில் கிடந்த பிள்ளையில் ஒழுகி பிள்ளையை முழுவதுமாக பொசுக்கி விடுகிறது,அரை மணிநேரத்துக்கும் மேலாக வெளியே வராத தங்கையைப் பார்க்க அண்ணன் போகிறான்,அங்க அவன் கண்ட கோலம் தங்கையின் பொசுங்கிய உடல்………

பெற்றோர்களே,பிள்ளைகளே,சகோதரர்களே சிறிய தவறுகள் மீளவே முடியாத துயரத்தில் நம்மைக் கொண்டு நிறுத்திவிடும்,இளம் பயிர்கள் கருகுவதால் தாங்க முடியாத விவசாயி தற்கொலை செய்துகொள்கிறான்,அதுதான் அதன் மீது அவன் கொண்டிருந்த அன்பு,அன்பைக் கொட்டி வளர்த்த செல்வங்கள் இப்படிக் கருகுவது பெற்றோர்களுக்கு மட்டுமல்ல பார்க்கும்,கேள்விப்படும் நமக்கும் இதயம் வலிக்கிறது,இனிமேலாவது இதுபோன்ற மரணங்கள் நடைபெறாமல் இருக்க ஆகவேண்டியதை செய்வோம்.

Follow on social media
CALL NOWPremium Web Hosting