வவுனியா இரு வெவ்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது ஹெரோயினுடன் இளைஞர்கள் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வவுனியா மாவட்ட குற்றத் தடுப்பு பிரிவு அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்ட திடிர் நடவடிக்கையின் போது கூமாங்குளம் பகுதியில் 5 கிராம் 140 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரையும் வேப்பங்குளம் பகுதியில் 5 கிராம் 100 மில்லிகிராம் ஹெரோயினுடன் இளைஞர் ஒருவரும் என இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களுடமும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளமையுடன் கைது செய்யப்பட்ட நபர்களையும் கைப்பற்றப்பட்ட ஹெரோயினையும் வவுனியா மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்குரிய நடவடிக்கையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
Follow on social media