இளம் பெண் திடீர் மரணம் – தொடரும் மர்மம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பல்கலைக்கழக கல்வியை முடித்துவிட்டு வேலைக்கான நேர்முகத் தேர்வில் கலந்துகொள்வதற்காக கொழும்பு சென்ற யுவதி ஒருவர் துரதிஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.

யசரா ஹன்சமாலி குணசேகர என்ற பெயருடைய இவர், திடீரென சுகவீனமடைந்து ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

யசரா பதுளை ஸ்பிரிங்வெலி பாடசாலை வீதியில் வசிக்கும் யுவதி என தெரிவிக்கப்படுகின்றது.

இவரது மற்றுமொரு சகோதரி தற்போது கொழும்பு பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று வருகிறார்.

பதுளை மத்திய மகா வித்தியாலயத்தில் கல்வி பயின்ற யசரா, 2017 ஆம் ஆண்டு களனி பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பை தொடர்ந்தார்.

யசரா ​​பல்கலைக்கழகக் கல்வியை முடித்து 2 மாதங்கள் மட்டுமே ஆகின்றன.

மேலும் யசரா பல்கலைக்கழகத்தில் படிக்கும் போது ஒரு தனியார் நிறுவனத்திற்கு வேலைக்காக அனுப்பிய விண்ணப்பத்தின்படி, நேர்முக தேர்வுக்கு வருமாறு சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு வந்த யசரா, திடீரென ஏற்பட்ட சுகவீனம் காரணமாக இரவு 10.30 மணி அளவில் ராகம வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கடந்த 2 ஆம் திகதி இரவு 11.30 மணி அளவில் யசரா உயிரிழந்துள்ளதுடன், ராகம வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் வைத்தியரால் கடந்த 3 ஆம் திகதி பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

எது எவ்வாறாயினும் யசராவின் உயிரிழப்புக்கு காரணம் இதுவரை தெரியவரவில்லை.

Follow on social media
CALL NOW

Leave a Reply