உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலை மூலம் பக்டீரியா பரவல்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

பெல்ஜியத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய சாக்லேட் தொழிற்சாலையான பாரி காலேபாட் (Barry Callebaut) தனது உற்பத்திகளை நிறுத்தியுள்ளது.

திங்கட்கிழமை சொக்லெட்டில் சால்மோனெல்லா பக்டீரியாவை கண்டுபிடித்ததையடுத்து குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து பெல்ஜிய உணவு அதிகாரிகளுக்கு (FAVV) சாக்லேட் நிறுவனம் தகவல் அளித்ததுடன், அனைத்து சாக்லேட் தயாரிப்புக்களை நிறுத்தவும் மற்றும் சோதனை நேரத்தில் இருந்து தயாரிக்கப்பட்ட அனைத்து பொருட்களையும் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துள்ளது.

சால்மோனெல்லா என்பது ஒரு வகை பக்டீரியா. இதுவரை 2,500 வகையான சால்மோனெல்லா பக்டீரியாக்கள் கண்டறியப்பட்டுள்ளன.

சால்மோனெல்லா பக்டீரியா ஒருவரது உடலுக்குள் பரவினால், காய்ச்சல், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, மயக்கம் உள்ளிட்ட கோளாறுகள் ஏற்படும்.

இந்த தொற்று பரவி வருவதற்கான காரணிகளை ஆராய்ந்த போது, சாக்லேட்கள் மூலம் இந்த பக்டீரியா பரவி வருவது கண்டறியப்பட்டுள்ளது.

Follow on social media
CALL NOW Premium Web Hosting