யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து விழுந்து பெண் உயிரிழப்பு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இங்கே அழுத்தவும்

யாழில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி கீழே விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவத்தில் கரணவாயைச் சேர்ந்த தங்கராசா தவமணி (வயது 68) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

அவர், கரணவாயில் உள்ள தனது வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் மகனுடன் அச்சுவேலி நோக்கி சென்று கொண்டிருந்தவேளை, கடந்த புதன்கிழமை காலை வல்லை முனியப்பர் ஆலயத்திற்கு அருகாமையில் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் இருந்து பின்புறமாக வீழ்ந்து படுகாயமடைந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவது,

இந்நிலையில் அவர் உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் நேற்றுமுன்தினம் வியாழக்கிழமை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .

மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேமகுமார் விசாரணைகளை மேற்கொண்டார்.

சமூக வலைத்தளங்கள்
CALL NOW

Leave a Reply