FIFA உலகக்கிண்ணப் போட்டியில் இலங்கைக்கு வருகை தாருங்கள் என்ற பதாதையுடன் நின்ற இலங்கை இளைஞர்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடியினை ஓரளவேனும் தீர்க்கும் வகையில் வெளிநாட்டு சுற்றுலா பிரயாணிகளை இலங்கைக்கு வருகை தர வைக்கும் நோக்கில் இலங்கையில் உள்ள இளைஞன் ஒருவரின் முயற்சிதான் இது.
கட்டார் நாட்டில் தற்போது இடம் பெற்று வரும் FIFA உலகக் கிண்ண போட்டிக்கு வருகை தரும் பல நாடுகளை சேர்ந்த பல லட்சக்கணக்கான மக்களுக்கு இலங்கை மீதான ஈர்ப்பினை ஏற்படுத்தி வருகின்றார் இலங்கையில் இருந்து கட்டார் நாட்டுக்கு பணிபுரியச் சென்றுள்ள நவரட்னம் தனரூபம் என்ற இளைஞன்.
சுற்றுலாப்பயணிகளை இலங்கைக்கு வரவழைப்பதன் மூலம் அன்னியச் செலவணியினை பெற்றுக்கொள்ள முடியும்.
Follow on social media